/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் கடகம்
வார பலன் ( 20.3.2026 - 26.3.2026)கடகம்: ராமநாத சுவாமியை வழிபட சங்கடம் விலகும். நன்மை நடக்கும்.புனர்பூசம் 4: விரய குருவால் செலவு அதிகரிக்கும். வரவு வந்து கொண்டிருக்கும். அஷ்டம ஸ்தானத்திற்கு குரு பார்வை உண்டாவதால் நெருக்கடி, பயம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். குடும்பத்தில் இருந்த சங்கடம் குறையும்.பூசம்: எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரம் தொழிலில் ஆதாயம் கூடும். உதவி என்று உங்களைத் தேடி வருபவர்களுக்கு உதவி செய்யக்கூடிய அளவில் வசதி வாய்ப்புகளும் மன நிலையும் இருக்கும்.ஆயில்யம்: அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் புதன் அள்ளித் தருவார் என்ற வார்த்தை உண்மையாகப் போகிறது. பணத்திற்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.