உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கடகம்

வார பலன் ( 3.4.2026 - 9.4.2026)கடகம்: தில்லை நடராஜரை வழிபட சங்கடம் விலகும்.புனர்பூசம் 4: விரய குருவால் செலவு அதிகரிக்கும், நவீன பொருட்கள், வீடு, வாகனம் என வாங்குவீர், சிலருக்கு மருத்துவ செலவு ஏற்பட்டாலும் உடல்நிலை சீராகும், ஆரோக்கியமாக நடைபோட முடியும். இழந்த செல்வாக்கை மீண்டும் அடைவீர்.பூசம்: பாக்ய ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த நெருக்கடி எல்லாம் விலகும். வருமானம் அதிகரிக்கும். உடல்நிலையும் மனநிலையும் சீராகும். அரசியல், பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருப்போர் செல்வாக்கு உயரும்.ஆயில்யம்: வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். வாங்க நினைத்த இடத்தை வாங்குவீர். சாதுரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். செல்வாக்கு உயரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !