உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கடகம்

வார பலன் (10.4.2026 - 16.4.2026)கடகம்: வடாரண்யேசுவரரை வழிபட சங்கடம் விலகும்.புனர்பூசம் 4: விரய ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் மேற்கொள்ளும் வேலைகளில் நிதானம் தேவை. செலவு அதிகரிக்க வாய்ப்பிருப்பதால் பண விவகாரத்தில் கூடுதல் கவனம் அவசியம். சிலர் புதிய இடம் வீடு வாகனம் நகை என்று வாங்குவீர். திங்கள்கிழமை புதிய வேலைகளைத் தவிர்க்கவும்.பூசம்: பாக்ய சனியால் நெருக்கடி நீங்கும். உடல்நிலை சீராகும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும், வழக்கு விவகாரம் சாதகமாகும், திங்கள் செவ்வாயில் அனைத்திலும் பொறுமை தேவை.ஆயில்யம்: எடுத்த வேலை வெற்றியாகும். நினைத்த காரியம் நடந்தேறும், எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். புதிய இடம், வீடு வாங்கும் கனவு நனவாகும். வேலைப் பார்க்கும் இடத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். சாதுரியமாக செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றியடைவீர். செவ்வாய் புதனில் அனைத்திலும் பொறுமை காப்பது நல்லது.சந்திராஷ்டமம்: 13.4.2026 அதிகாலை 1:06 மணி - 15.4.2026 காலை 7:41 மணி 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !