/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் கடகம்
வார பலன் ( 24.4.2026 - 30.4.2026)கடகம்: நடராஜரை வழிபட சங்கடம் விலகும்.புனர்பூசம் 4: குருபகவான் சுப விரய செலவுகளை ஏற்படுத்துவார். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வம்பு வழக்கு சாதகமாகும். கடன் அடைபடும். சமுதாயத்தில் மறைந்த செல்வாக்கு மீண்டும் கிடைக்கும். தேவையான அளவிற்கு பணம் வரும்.பூசம்: சனிபகவான் பார்வையால் தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். இழுபறியாக இருந்த வேலை முடியும்.ஆயில்யம்: சூரியன் புதனால் அரசுவழி முயற்சி சாதகமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். புதிய இடம், வீடு வாங்கும் கனவு நனவாகும்.