/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் கடகம்
வார பலன் (1.5.2026 - 7.5.2026)கடகம்: கபாலீஸ்வரரை வழிபட சங்கடம் விலகும்.புனர்பூசம் 4: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வம்பு வழக்கு சாதகமாகும். கடன் அடைபடும். மறைந்த செல்வாக்கு வெளிப்படும். தேவையான அளவிற்கு பணம் வரும். சிலர் புதிய இடம் வீடு வாங்குவீர்கள்.பூசம்: குழப்பத்தில் இருந்தவர்களுக்கு தெளிவு பிறக்கும். திட்டமிட்டு செயல்படத் தொடங்குவீர். தொழிலில் கவனம் அதிகரிக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். இழுபறி வேலை முடியும்.ஆயில்யம்: கடந்த வாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். பணப்புழக்கம் கூடுதலாகும். அரசுவழி முயற்சிகள் சாதகமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். புதிய இடம், வீடு வாங்கும் கனவு நனவாகும்.