வார ராசிபலன்
வார ராசிபலன் கடகம்
வார பலன் (5.6.2026 - 11.6.2026)கடகம்: ஆபத் சகாயேஸ்வரரை வழிபட சங்கடம் விலகும்.புனர்பூசம் 4: நேற்று இழுபறியாக இருந்த வேலை முடியும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். புதிய சொத்து சேரும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.பூசம்: உங்களுக்கு இருந்த சங்கடம் விலகும். எடுக்கும் வேலை வெற்றியாகும். குடும்பத்தில் இருந்த பிரச்னை முடியும். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும். உடல்நிலை சீராகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். வருமானம் அதிகரிக்கும். ஞாயிற்றுக்கிழமை வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நல்லது.ஆயில்யம்: அரசுவழி முயற்சி சாதகமாகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பணம் வரும். வேலைப்பார்க்கும் இடத்தில் நிம்மதி உண்டாகும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.சந்திராஷ்டமம்: 6.6.2026 மாலை 4:17 மணி - 8.6.2026 இரவு 11:23 மணி