உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கடகம்

 வார பலன் ( 12.6.2026 - 18.6.2026 )கடகம்: சிவபெருமானை வழிபட சங்கடம் விலகும்.புனர்பூசம் 4: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். புதிய சொத்து சேரும்.பூசம்: சனிபகவானால் சங்கடம் விலகும். எடுக்கும் வேலை வெற்றியாகும். செல்வாக்கு உயரும். உடல் நிலை சீராகும். வருமானம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். வழக்கு சாதகமாகும்.ஆயில்யம்: திட்டமிட்டு செயல்படுவதால் முயற்சி வெற்றியாகும். கலைஞர்களுக்கும் வியாபாரிகளுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வங்கியில் கேட்ட லோன் கிடைக்கும். வேலைப் பார்க்கும் இடத்தில் நிம்மதியான நிலை உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !