/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் கடகம்
வார பலன் ( 26.6.2026 - 2.7.2026 )கடகம்: சந்திரனை வழிபட்டு வர சங்கடம் விலகும்.புனர்பூசம் 4: குரு அலைச்சலை ஏற்படுத்துவார். அவருடைய பார்வை முயற்சிகளை வெற்றியாக்கும். வசதி வாய்ப்புகளை அதிகரிக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். புதிய சொத்து சேரும்.பூசம்: பாக்ய சனியால் வாழ்க்கை வளமாகும். சங்கடம் விலகும். உடல்நிலை சீராகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். வழக்கு சாதகமாகும்.ஆயில்யம்: விரய செலவு குறையும். எதை எடுத்தாலும் நஷ்டம் கஷ்டம் என்றிருந்த நிலை மாறும். சூரியன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பாராத செலவு ஏற்படும். மனநிம்மதிக்கு கோயிலுக்கு செல்வீர்கள்.