/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் கடகம்
கடகம்: குலதெய்வத்தை வழிபட சங்கடம் விலகும். வேண்டுதல் நிறைவேறும்.புனர்பூசம் 4: குருவால் அலைச்சல் அதிகரிக்கும். லாபம் உண்டாகும். சொத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.பூசம்: குரு பார்வையால் சங்கடம் விலகும். இழுபறி வேலை முடியும். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை முடியும். விவாகரத்து கேட்டு நீதிமன்றம் வரை சென்றவர்களும் மனம் மாறுவர். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.ஆயில்யம்: எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர். நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரிகளுக்கு இழுபறியாக இருந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். வங்கியில் கேட்டிருந்த லோன் கிடைக்கும். வெற்றியாகும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.