வார ராசிபலன்
வார ராசிபலன் கடகம்
வார பலன் ( 11.9.2026 - 17.9.2026 )கடகம்: வீரராகவப் பெருமாளை வழிபட சங்கடம் விலகும். நன்மை நடக்கும்.புனர்பூசம்4: குருவருளால் குழந்தை பாக்கியம் ஏற்படும். பிள்ளைகளுக்காக எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தம்பதிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். பண வரவு திருப்தி தரும்.பூசம்: எடுக்கும் வேலை வெற்றியாகும். வியாபாரம் தொழில் லாபம் தரும். புதிய வாகனம் வாங்க முடியும். தொழில் நிறுவனம் நடத்தி வருபவர்களுக்கு பணியாளர் ஆதரவு கிடைக்கும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் மனம் மாறுவர். விஐபிகள் ஆதரவால் உங்கள் செல்வாக்கு உயரும்.ஆயில்யம்: வேலைகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் முதலீடு செய்பவர்கள் மார்க்கெட் நிலவரத்தை அறிந்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகாரிகள் ஆலோசனையை ஏற்பது அவசியம். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.