உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கடகம்

 வார பலன் (18.9.2026 - 24.9.2026)கடகம்: காளத்தீஸ்வரரை வழிபட சங்கடம் விலகும். மனம் தெளிவடையும்.புனர்பூசம் 4: ஜென்ம குருவின் பார்வைகளால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். திருமண வயதினருக்கு வரன் வாசல் தேடி வரும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்போருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். புதன்கிழமை யோசித்து செயல்படுவது நல்லது.பூசம்: பாக்கிய ஸ்தானத்தில் உக்கிரமாக சஞ்சரிக்கும் சனியால் செயல்களில் வேகம் இருக்கும். தடாலடியாக சில வேலைகளில் இறங்கி ஆதாயமடைவீர்.தொழிலில் நிம்மதியான நிலை உருவாகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். வருமானம் அதிகரிக்கும். வியாழக்கிழமை விழிப்புடன் செயல்படுவது அவசியம்.ஆயில்யம்: திறமை வெளிப்படும் நாள். இழுபறியாக இருந்த வேலை முடியும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். கேட்ட இடத்தில் இருந்து பணம் வரும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும்.சந்திராஷ்டமம்: 23.9.2026 இரவு 10:25 மணி - 26.9.2026 காலை 6:32 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !