வார ராசிபலன்
வார ராசிபலன் கடகம்
வார பலன் (30.10.2026 - 5.11.2026)கடகம்: சங்கர நாராயணரை வழிபட சங்கடம் விலகும்.புனர்பூசம் 4: சிம்ம குருவால் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வியாபார போட்டியாளர்கள் பலம் இழப்பர். வழக்கு விவகாரம் சாதகமாகும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.பூசம்: உக்கிரமாக சஞ்சரிக்கும் சனியால் உங்களுக்கு ஏற்பட்ட சங்கடம் விலகும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். கையில் பணம் புரளும்.ஆயில்யம்: தொழிலில் லாபத்தையும், முயற்சியில் வெற்றியையும் நோக்கி நடைபோடுவீர். வர வேண்டிய பணம் வரும். உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். சிலருக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வங்கியில் கேட்டிருந்த கடன் கிடைக்கும்.