/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் கடகம்
வார பலன் (06.11.2026 - 12.11.2026 )கடகம்: தில்லை நடராஜரை வழிபட சங்கடம் விலகும். நன்மை நடக்கும்.புனர்பூசம் 4: குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பண வரவு அதிகரிக்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு பொறுப்பும், பதவியும் தேடி வரும். எதிர்ப்பு போட்டி விலகும். ஆரோக்கியம் சீராகும். பூசம்: எடுக்கும் வேலை வெற்றியாகும். புதிய வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். தொழில் நிறுவனம் நடத்தி வருபவர்களுக்கு பணியாளர் ஆதரவு கிடைக்கும். வி.ஐ.பி.,கள் ஆதரவால் செல்வாக்கு உயரும். பொருட்கள் வாங்குவீர். ஆயில்யம்: சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். இழுபறியான வேலைகள் முடியும். வரவு அதிகரிக்கும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். புத்திசாலித்தனம் வெளிப்படும்.