வார ராசிபலன்
வார ராசிபலன் கடகம்
வார பலன் (13.11.2026 - 19.11.2026)கடகம்: கருமாரி அம்மனை வழிபட மனம் தெளிவடையும். நன்மை உண்டாகும்.புனர்பூசம் 4: இரண்டாமிட குருவும் அவருடைய பார்வைகளும் உங்கள் நிலையை உயர்த்தும். வருமானம் உயரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். உடலில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். திடீர் வாய்ப்புகள் தேடிவரும். வழக்கு விவகாரம் சாதகமாகும். செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும். செவ்வாய்க்கிழமை யோசித்து செயல்படுவது நன்மையளிக்கும்.பூசம்: பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால் நினைப்பதை சாதிப்பீர்கள். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். தடாலடியாக சில வேலைகளில் இறங்கி ஆதாயம் அடைவீர்கள். குடும்பம் தொழிலில் நிம்மதியான நிலை இருக்கும். கையில் பணம் புரளும். செவ்வாய் புதனில் கவனமாக செயல்படுவது அவசியம்.ஆயில்யம்: ராசிக்குள் கேது, ஏழாமிடத்தில் ராகு சஞ்சரிப்பதால் புதியவர்களிடம் குடும்ப, தொழில் ரகசியங்களைப் பகிர்வதும், குடும்பத்திற்குள் அந்நியருக்கு இடம் கொடுப்பதும் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். பண விவகாரத்தில் எச்சரிக்கை அவசியம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நன்மையளிக்கும். புதன் வியாழனில் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.சந்திராஷ்டமம்: 17.11.2026 மதியம் 1:04 மணி - 19.11.2026 இரவு 9:44 மணி