வார ராசிபலன்
வார ராசிபலன் கடகம்
வார பலன் (20.11.2026 - 26.11.2026)கடகம்: விநாயகரை வழிபட சங்கடங்கள் விலகும்.புனர்பூசம் 4:தன, குடும்ப ஸ்தான குருவால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். மனதில் இருந்த குழப்பம் விலகும். உங்கள் செல்வாக்கு உயரும். சொந்த இடம் வீடு என்ற கனவு நனவாகும். பொருளாதார நிலை உயரும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும்.பூசம்:பாக்கிய சனி வக்கிரம் அடைந்திருப்பதால் நினைப்பதை சாதிப்பதில் உறுதியாக இருப்பீர்கள். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். துணிச்சலும் தைரியமும் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த ஆதாயம் வரும். வேலைப்பார்க்கும் இடத்தில் மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.ஆயில்யம்:நான்காமிட புதனால் உங்கள் அறிவாற்றல் வெளிப்படும். நல்லது எது கெட்டது எது என்பதை அறிந்து செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வருமானம் உயரும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் தேடிவரும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும்.