/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் கன்னி
வார பலன் (14.8.2026 - 20.8.2026)கன்னி: நரசிம்மரை வழிபட நன்மை நடக்கும்.உத்திரம் 2,3,4: உங்கள் செல்வாக்கு உயரும். எடுத்த வேலை வெற்றியாகும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். உத்தியோகஸ்தர்களுக்கு நிம்மதியான நிலை உண்டாகும். அரசு வழி முயற்சி சாதகமாகும்.அஸ்தம்: லாப குருவால் எண்ணம் நிறைவேறும். வியாபாரம் வளர்ச்சி அடையும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். கையில் பணம் புரளும். திருமண வயதினருக்கு வரன் வரும். நண்பர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும்.சித்திரை 1,2: தைரியமாக செயல்படுவீர். உங்கள் திறமை வெளிப்படும். மற்றவரால் முடிக்க முடியாத வேலைகளை முடித்து லாபம் காண்பீர். சொந்த இடம், வீடு என்ற கனவு சிலருக்கு நனவாகும். குடும்பம், தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும்.