உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கன்னி

வார பலன் (20.6.2025 - 26.6.2025)கன்னி: லட்சுமி நரசிம்மரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.உத்திரம் 2,3,4: சூரியனால் இதுவரை இருந்த நெருக்கடி விலகும். தொழில் முன்னேற்றம் அடையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். இழுபறி வேலை முடியும். அரசியல்வாதிகளுக்கு ஆதரவு பெருகும். வெள்ளி, சனியில் வேலைகளில் கூடுதல் கவனம் தேவை.அஸ்தம்: குரு பார்வையுடன் ராகுவும் சனியும் உங்கள் செல்வாக்கை உயர்த்துவர். போட்டி, எதிர்ப்பு, மறைமுகத் தொல்லை எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். உடல்நிலை சீராகும். வழக்கு சாதகமாகும். சனி ஞாயிறில் உங்கள் செயல்களில் நிதானம் தேவை.சித்திரை 1,2: செவ்வாய், கேது பனிரெண்டாமிடத்தில் சஞ்சரிப்பதால் செலவும் அலைச்சலும் அதிகரிக்கும். பார்த்து வரும் வேலையிலும், செய்துவரும் தொழிலிலும் கவனம் தேவை. குடும்பத்தில் நிம்மதியும், பணப்புழக்கமும் உண்டாகும். ஞாயிற்றுக்கிழமை பொறுமை அவசியம்.சந்திராஷ்டமம்: 20.6.2025 இரவு 7:07 மணி - 22.6.2025 இரவு 9:27 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !