வார ராசிபலன்
வார ராசிபலன் கன்னி
வார ராசி பலன் (18.7.2025 - 24.7.2025)கன்னி: ஆண்டாள் அழகரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.உத்திரம் 2,3,4: லாப சூரியனால் வரவு அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். நெருக்கடி விலகும். செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வெள்ளிக்கிழமை வேலைகளில் கவனம் தேவை.அஸ்தம்: சத்ரு ஜெய ஸ்தானத்தில் குருபார்வையுடன் சஞ்சரிக்கும் ராகுவால் உங்கள் செல்வாக்கு உயரும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வியாபாரத்தில் உங்களுக்கு போட்டியாக இருந்தவர்கள் பலம் இழப்பார்கள். வழக்கு சாதகமாகும். சனிக்கிழமை செயல்களில் நிதானம் தேவை.சித்திரை 1, 2: செலவும் அலைச்சலும் அதிகரிக்கும் என்றாலும் குருவின் 2, 4, 6 ம் இட பார்வைகளும், லாப சூரியனும் உங்கள் செல்வாக்கை உயர்த்துவர். குடும்பத்தில் நிம்மதியும். பணப்புழக்கமும் உண்டாகும். சனி ஞாயிறில் அனைத்திலும் பொறுமை அவசியம்.சந்திராஷ்டமம்: 18.7.2025 அதிகாலை 3:28 மணி - 20.7.2025 அதிகாலை 5:47 மணி