/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் கன்னி
வார பலன் (25.7.2025 - 31.7.2025)கன்னி: சங்கர நாராயணரை வழிபட நன்மை உண்டாகும்.உத்திரம் 2,3,4: லாப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் நெருக்கடி விலகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். நினைத்த வேலை நடக்கும்.அஸ்தம்: சத்ரு ஜெய ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். உத்தியோகம் தொழிலில் தோன்றிய நெருக்கடி நீங்கும். புதன் சாதகமாக இருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.சித்திரை 1,2: செவ்வாய், கேது விரய செலவுகளை அதிகரிப்பார். குரு பார்வைகளால் திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். எதிர்பார்த்த பணம் வரும். எதிர்ப்பு விலகும். வழக்கு சாதகமாகும்.