உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கன்னி

வார பலன்  (8.8.2025 - 14.8.2025)கன்னி: நரசிம்மரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.உத்திரம் 2,3,4: எதிர்பார்த்த பணம் வரும். தடைபட்ட வேலை நடக்கும். தொழில் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.  வியாழன் விழிப்புடன் செயல்படுவது நல்லது.அஸ்தம்: குருவின் பார்வை 2, 4, 6 ம் இடங்களுக்கு கிடைப்பதால் திறமை அதிகரிக்கும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். எதிர்ப்பு விலகும். வழக்குகள் சாதகமாகும்.  குடும்பத்தில் நிம்மதி இருக்கும். வருமானம் அதிகரிக்கும். தாய்வழி உறவுகளால் லாபம் அடைவீர்கள்.சித்திரை 1,2: ராசிக்குள் சஞ்சரிக்கும் செவ்வாயால் பதட்டம் அதிகரிக்கும். வேலைகளில் கவனக்குறைவு ஏற்படும். பாக்கிய ராகு, லாப சூரியனால் நிலை உயரும். செல்வாக்கு கூடும். வருமானம் அதிகரிக்கும். நினைத்த வேலையை நினைத்தபடி நடத்தி முடிப்பீர்கள்.சந்திராஷ்டமம்: 14.8.2025 காலை 11:38 மணி - 16.8.2025 மதியம் 2:00 மணி 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !