வார ராசிபலன்
வார ராசிபலன் கன்னி
வார பலன் 29.8.2025 - 4.9.2025கன்னி: வெங்கடாஜலபதியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.உத்திரம் 2,3,4: விரய சூரியனால் செலவு அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்ப்பு இழுபறியாகும். குரு பார்வையால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.அஸ்தம்: புதன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நினைப்பதும், நடப்பதும் வேறாக இருக்கும். எடுக்கும் முயற்சி இழுபறியாகும். வருமானத்தில் தடையும் தாமதமும் உண்டாகும். ஆறாமிட ராகு உங்கள் திறமையை அதிகரிப்பார். எதிர் வரும் பிரச்னைகளை இல்லாமல் செய்வார்.சித்திரை 1,2: ராசிக்குள் செவ்வாய், விரய இடத்தில் கேது, சூரியன், புதன் சஞ்சரிப்பதால் செலவு அதிகரிக்கும். தொழிலில் முதலீட்டிற்கு ஏற்ப வருமானம் இல்லாமல் போகும். குரு பார்வை உங்களைப் பாதுகாக்கும். தேவைக்கேற்ற வருமானம் வரும். உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும். வழக்கு சாதகமாகும்.