வார ராசிபலன்
வார ராசிபலன் கன்னி
வார பலன் 12.9.2025 - 18.9.2025கன்னி: உலகளந்த பெருமாளை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.உத்திரம் 2,3,4: விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து செலவு, இழப்பை ஏற்படுத்தும் சூரியன் புதன் முதல் ஜென்ம ராசிக்குள் சஞ்சரிப்பதால் உழைப்பு அதிகரிக்கும். செயல்களில் வேகம் இருக்கும். உடல்நிலையில் பாதிப்பு உண்டாகும்.அஸ்தம்: சத்ரு ஜெய ஸ்தானத்தில் குரு பார்வையுடன் சஞ்சரிக்கும் ராகு செல்வாக்கை உயர்த்துவார். உடல் பாதிப்பை நீக்குவார். பிரச்னை, போராட்டம் என்ற நிலையில் இருந்து உங்களை விடுவிப்பார். வெள்ளி அன்று வேலையில் நிதானம் தேவை.சித்திரை 1, 2: ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் செவ்வாய் ஞாயிறு முதல் 2ம் இடம் சென்று குரு பார்வை பெறுவதால் உங்கள் வேலைகளில் தெளிவு ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி, பணப்புழக்கம் இருக்கும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். வெள்ளி அன்று பொறுமை அவசியம்.சந்திராஷ்டமம்: 10.9.2025 இரவு 7:42 மணி – 12.9.2025 இரவு 10:04 மணி