உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கன்னி

வார பலன் ( 9.1.2026 - 15.1.2026 ) கன்னி: வீரராகவ பெருமாளை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.உத்திரம் 2,3,4: சுக ஸ்தானத்தில் புதனுடன் சஞ்சரிக்கும் சூரியன் முயற்சிகளை வெற்றியாக்குவார். அறிவாற்றலால் நினைத்ததை நடத்தி முடிப்பீர். உறவினர்கள் ஆதரவு உண்டாகும். தொழில் புரிவோருக்கு பணியாளர் ஒத்துழைப்பு கிடைக்கும்.அஸ்தம்: ஆறாமிட சனி ராகுவால் செல்வாக்கு உயரும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வியாபாரத்தில் உண்டான நெருக்கடி நீங்கும். பிரச்னை போராட்டம் என்ற நிலை மாறும். வழக்கு சாதகமாகும்.சித்திரை 1, 2: கேந்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கூட்டு கிரகங்களால் நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். புதிய இடம் வீடு வாங்க முடியும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரிகளுக்கு பணியாளர் ஒத்துழைப்பு கிடைக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !