வார ராசிபலன்
வார ராசிபலன் கன்னி
வார பலன் (20.2.2026 - 26.2.2026)கன்னி: சங்கர நாராயணரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.உத்திரம் 2,3,4: மனக்குழப்பம் விலகும். உடல்நிலை சீராகும். நிதானமாக செயல்படுவீர். எடுத்த வேலைகளை முடிப்பதில் உறுதியாக இருப்பீர். அரசுவழி முயற்சி சாதகமாகும். சனி ஞாயிறு அன்று நிதானம் தேவை.அஸ்தம்: உங்கள் வளர்ச்சியைப் பார்த்து மற்றவர் பொறாமைப்படுவர்.தொழில் முன்னேற்றம் அடையும். வரவேண்டிய பணம் வரும். சிலர் புதிய இடம் வீடு வாங்குவீர். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். ஞாயிறு திங்கள் அன்று புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.சித்திரை 1,2: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். நினைத்த வேலை நடக்கும். உடல்நிலை சீராகும். இழுபறி வழக்கு சாதகமாகும். கேட்ட பணம் கிடைக்கும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர். திங்கள் அன்று அனைத்திலும் பொறுமை அவசியம்.சந்திராஷ்டமம்: 21.2.2026 இரவு 8:18 மணி - 23.2.2026 இரவு 11:03 மணி.