உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கன்னி

வார பலன் ( 27.2.2026 - 5.3.2026)கன்னி: பகவதி அம்மனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.உத்திரம் 2,3,4: உங்கள் செல்வாக்கு உயரும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். வியாபாரம் தொழிலில் வருமானம் அதிகரிக்கும். சுய தொழில் புரிவோருக்கு பணியாளர் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.அஸ்தம்: சத்ரு ஜெய ஸ்தானம் பலமடைந்திருப்பதால் எதிரிகள் தொல்லை விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பிரச்சனைகள் போராட்டங்கள் என்ற நிலை மாறும். வழக்கு விவகாரம் சாதகமாகும். வருமானம் அதிகரிக்கும்.சித்திரை 1, 2: எடுத்த வேலைகளை முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய இடம் வீடு வாங்கும் கனவு நனவாகும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரிகளுக்கு தள்ளிப்போன ஒப்பந்தம் கிடைக்கும். ஷேர் மார்க்கெட் லாபம் தரும். புதிய சொத்து வாங்கும் முயற்சி வெற்றியாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !