உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கன்னி

 வார பலன் ( 6.3.2026 - 12.3.2026 )கன்னி: லட்சுமி நாராயணரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.உத்திரம் 2,3,4: சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் செல்வாக்கை உயர்த்துவார். உடல்நிலையில் இருந்த பாதிப்பை நீக்குவார். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார். பணியாளர்கள் ஒத்துழைப்பை அதிகரிப்பார்.அஸ்தம்: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வியாபாரத்தில் தோன்றிய நெருக்கடி நீங்கும். பிரச்னை போராட்டம் என்ற நிலை மாறும். வழக்கு சாதகமாகும். வருமானம் அதிகரிக்கும்.சித்திரை 1, 2: செவ்வாய் பகவான் சாதகமாக இருப்பதால் முயற்சி வெற்றியாகும். உடல்நிலை சீராகும். ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !