வார ராசிபலன்
வார ராசிபலன் கன்னி
வார பலன் ( 3.4.2026 - 9.4.2026)கன்னி: உலகளந்த பெருமாளை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.உத்திரம் 2,3,4: சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் சிலருக்கு இடமாற்றத்தை ஏற்படுத்துவார். செய்துவரும் தொழிலில் மாற்றம் செய்ய வைப்பார். சோர்ந்து கிடந்தவர்களையும் சுறு சுறுப்பாக செயல்பட வைப்பார். இழுபறியாக இருந்த வேலைகளை முடித்திடக்கூடிய நிலையினை உண்டாக்குவார்.அஸ்தம்: ஆறாமிட ராகுவால் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். நினைத்தபடி செயல்படுவீர். வியாபாரம், தொழிலில் தோன்றிய நெருக்கடி நீங்கும். பிரச்னை போராட்டம் என்ற நிலை மாறும். வருமானம் அதிகரிக்கும்.சித்திரை 1, 2: செவ்வாய், சூரியன், சனி ராசியைப் பார்ப்பதால் எடுத்த வேலைகளை முடிக்க வேண்டும் என நினைத்தாலும் அதில் ஏதேனும் ஒரு தடை ஏற்படும். நன்றாகப் பழகியவர்களும் உங்களுக்கு எதிராக மாறுவர், கூட்டுத் தொழிலில் எதிர்பாராத பிரச்னை தோன்றும்.