உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கன்னி

வார பலன் (10.4.2026 - 16.4.2026)கன்னி: நரசிம்மரை வழிபட எடுக்கும் வேலை வெற்றியாகும்.உத்திரம் 2,3,4: வாரத்தின் பிற்பகுதியில் அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் உச்சமாக சஞ்சரிப்பதால் உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவை. வேலைப் பார்க்கும் இடத்தில் உடன் பணிபுரிவோரை அனுசரித்துச்செல்வது அவசியம். அரசியல் வாதிகளுக்கு எதிர்பாராத பிரச்னை தோன்றும்.அஸ்தம்: சப்தம ஸ்தானத்தில் சனி, செவ்வாய், புதன் சஞ்சரிப்பதால் அனைத்திலும் நிதானமாக செயல்படுவது நன்மை அளிக்கும். வியாபாரிகளுக்கு சட்ட ரீதியான பிரச்னை தோன்ற வாய்ப்பிருப்பதால் புதிய முயற்சிகளில் கவனம் தேவை. இந்த நேரத்தில் ஆறாமிட ராகு உங்களைப் பாதுகாப்பார்.சித்திரை 1,2: ராசி நாதன் புதன், நட்சத்திராதிபதி செவ்வாய் சஞ்சாரம் எதிர்மறையாக இருப்பதால் பண விவகாரத்தில் கூடுதல் கவனம் தேவை, வேலையில் இருப்போர் மேல் அதிகாரியை அனுசரித்துச் செல்வது அவசியம், பணத்திற்கு ஆசைபட்டு தவறான வழியில் செயல்படுவோர் சங்கடத்திற்கு ஆளாக நேரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !