வார ராசிபலன்
வார ராசிபலன் கன்னி
வார பலன் (17.4.2026 - 23.4.2026)கன்னி: தில்லை காளியை வழிபட எடுக்கும் வேலை வெற்றியாகும்.உத்திரம் 2,3,4: அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் உச்சமாக சஞ்சரித்தாலும் உங்கள் தன, பாக்யாதிபதி சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். அரசியல்வாதிகள் நிலை உயரும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். வெள்ளி சனிக்கிழமை அன்று வேலைகளில் நிதானம் தேவை.அஸ்தம்: சப்தம ஸ்தானத்தில் சனி, செவ்வாய், புதன் என சஞ்சரித்து உங்களை பயமுறுத்தினாலும் ராகு துணிச்சலாக நடைபோட வைப்பார். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பும், வம்பு வழக்குகளும் விலகும். அரசியல்வாதிகளுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். சனிக்கிழமை கவனமாக செயல்படுவது நல்லது.சித்திரை 1,2: ராசி நாதன் புதன், நட்சத்திராதிபதி செவ்வாய் சஞ்சாரம் எதிர்மறையாக இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. திட்டமிட்டு செயல்படுவதால் எடுக்கும் வேலை வெற்றியாகும். வேலையில் இருப்போர் அதிகாரியை அனுசரித்துச் செல்வது நல்லது. ஞாயிற்றுக்கிழமை கவனமாக செயல்படுவது அவசியம்.சந்திராஷ்டமம்: 17.4.2026 மதியம் 12:07 மணி - 19.4.2026 மதியம் 3:03 மணி