/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் கன்னி
வார பலன் ( 24.4.2026 - 30.4.2026)கன்னி: வெங்கடாஜலபதியை வழிபட எடுக்கும் வேலை வெற்றியாகும்.உத்திரம் 2,3,4: உங்கள் விரயாதிபதி சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நெருக்கடி நீங்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். நம்பிக்கை அதிகரிக்கும். தன, பாக்யாதிபதிசுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பணப்புழக்கம் இருக்கும்.அஸ்தம்: சுக்கிர பகவான் ஆற்றலை அதிகரிப்பர். அரசியல்வாதிகளை தலைநிமிர்ந்து நடைபோட வைப்பர். அச்சமூட்டிய விவகாரங்களை ஒன்றும் இல்லாமல் செய்வதுடன் ஆரோக்யத்தை அதிகரிப்பர். நற்பெயரை பெற வைப்பார். சித்திரை 1,2: நீண்ட நாள் கனவு நனவாகும். பொன் பொருள் சேரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கேட்ட இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும். கலைஞர்களுக்கும் வியாபாரிகளுக்கும் இழுபறியாக இருந்த ஒப்பந்தம் கிடைக்கும்.