/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் கன்னி
வார பலன் ( 22.5.2026 - 28.5.2026)கன்னி: நரசிம்மரை வழிபட சங்கடங்கள் விலகும்.உத்திரம் 2,3,4: கடந்த ஒரு மாதமாக இருந்த போராட்ட நிலை மாறும். சட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு மீண்டும் உயரும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும்.அஸ்தம்: எந்த ஒன்றிலும் துணிச்சலாக நடைபோடுவீர்கள். மனதில் நினைத்ததை உடனே செய்து முடிப்பீர்கள். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு, வம்பு வழக்குகள் விலகும். நம்பிக்கை அதிகரிக்கும். பணப்புழக்கம் சீராகும்.சித்திரை 1,2: அஷ்டம ஸ்தானாதிபதி பலம் பெற்றிருப்பதால் எந்த ஒன்றிலும் நிதானம் தேவை. வேலையில் இருப்போர் மேல் அதிகாரியை அனுசரித்துச் செல்வது அவசியம். புதிய இடம் வீடு வாங்குபவர்கள் வில்லங்கம் பார்ப்பதில் கவனம் தேவை.