வார ராசிபலன்
வார ராசிபலன் கன்னி
வார ராசி பலன் (29.5.2026 - 4.6.2026)கன்னி: வீர ராகவ பெருமாளை வழிபட சங்கடம் விலகும்.உத்திரம் 2,3,4: இதுவரை உங்களுக்கிருந்த போராட்ட நிலை மாறும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். அரசு வழியில் மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும்.அஸ்தம்: லாப குருவும் ஆறாமிட ராகுவும் நீங்கள் எடுத்த முயற்சிகளை வெற்றியாக்குவர். தடைபட்ட வேலை நடக்கும். வரவேண்டிய பணம் வரும். நட்பு வட்டம் விரிவடையும். கண்டக சனியால் ஏற்பட்ட பாதிப்பு விலகும். உடல்நிலை சீராகும், வம்பு வழக்கு சாதகமாகும். சித்திரை 1,2: வேலையில் இருப்போர் அதிகாரியை அனுசரித்துச் செல்வது அவசியம். புதிய இடம் வீடு வாங்குபவர்கள் அதில் உள்ள சட்ட சிக்கல்களைத் தெரிந்து கொண்டு முயற்சியை மேற்கொள்வது நல்லது. நிதானமும் பொறுமையும் காப்பது அவசியம்.