வார ராசிபலன்
வார ராசிபலன் கன்னி
வார பலன் ( 12.6.2026 - 18.6.2026 )கன்னி: மீனாட்சி சுந்தரேசுவரரை வழிபட சங்கடம் விலகும்.உத்திரம் 2,3,4: தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனால் செயல்களில் வேகம் இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். அரசு வழியில் எடுத்த வேலை வெற்றியாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு மீண்டும் உயரும்.அஸ்தம்: லாப குருவால் சனிபகவானின் பாதிப்பு விலகும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் பலமிழப்பர். எடுக்கும் வேலை வெற்றியாகும். உடல்நிலை சீராகும். வரவேண்டிய பணம் வரும். தம்பதிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். வெள்ளி அன்று விழிப்புடன் செயல்படுவது நல்லது.சித்திரை 1,2: அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் ஆட்சியாக சஞ்சரிப்பதால் அனைத்திலும் கவனமாக இருப்பது அவசியம். உடன் இருப்பவர்களே மறைமுகத் தொல்லை தருவர்.வேலையில் இருப்போர் அதிகாரியின் ஆலோசனையை ஏற்பது நல்லது. வெள்ளி சனி அன்று புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.சந்திராஷ்டமம்: 11.6.2026 அதிகாலை 4:17 மணி - 13.6.2026 காலை 7:27 மணி