/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் கன்னி
வார பலன் ( 26.6.2026 - 2.7.2026 )கன்னி: லட்சுமி நரசிம்மரை வழிபட சங்கடம் விலகும்.உத்திரம் 2,3,4: போராட்டநிலை மாறும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதிய தொழில் தொடங்க எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். அஸ்தம்: குருவும் ராகுவும் முயற்சிகளை வெற்றியாக்குவர். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். வரவேண்டிய பணம் வரும். தடைபட்ட வேலை நடக்கும். கண்டக சனியால் ஏற்பட்ட பாதிப்பு விலகும். உடல்நிலை சீராகும்.சித்திரை 1,2: செவ்வாய் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எடுக்கும் வேலைகளில் கவனம் தேவை. எந்தவொரு வேலையாக இருந்தாலும் அதில் உங்களுடைய மேற்பார்வை அவசியம். புதிய இடம் வீடு வாங்குபவர்கள், சட்ட சிக்கல்களைத் தெரிந்துகொண்டு முயற்சியை மேற்கொள்வது நல்லது.