வார ராசிபலன்
வார ராசிபலன் கன்னி
வார பலன் (17.7.2026 - 23.7.2026)கன்னி: லட்சுமி நரசிம்மரை வழிபட நல்லது நடக்கும்.உத்திரம் 2,3,4: சூரியபகவானால் சங்கடம் நீங்கும். வரவேண்டிய பணம் வரும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிம்மதியான நிலை உண்டாகும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். அரசு வழி முயற்சி சாதகமாகும்.அஸ்தம்: குரு அஸ்தமனம் அடைந்திருப்பதால் வழக்கமான வேலைகளிலும் கவனம் தேவை. புதிய முதலீடு மேற்கொள்வதற்குமுன் சந்தை நிலவரத்தை அறிவது நன்மை அளிக்கும். தொழிலில் நேரடி கண்காணிப்பு நன்மை தரும். எடுக்கும் வேலை வெற்றியாகும்.சித்திரை 1,2: புதிய முயற்சிகளில் நிதானம் தேவை. அடுத்தவரை நம்பி இந்த நேரத்தில் எந்த வேலையிலும் ஈடுபட வேண்டாம். ராகுவால் வம்பு வழக்கு என்பதெல்லாம் நெருங்காமல் போகும். தடைபட்ட வேலை நடக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.