/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் கன்னி
வார பலன் (7.8.2026 - 13.8.2026)கன்னி: அதிகாலையில் சூரியனை வழிபட சங்கடம் விலகும்.உத்திரம் 2,3,4: சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அரசுவழி வேலை சாதகமாகும். அரசியல்வாதிக்கு செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு விரும்பிய மாற்றம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும்.அஸ்தம்: உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் பலம் இழப்பர். தொழில் வளர்ச்சி அடையும். உடல் நிலை சீராகும். வரவேண்டிய பணம் வரும். தம்பதிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். வழக்கு சாதகமாகும். எடுத்த வேலைகளை முடியும்.சித்திரை 1,2: வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். லாப சூரியன், குரு, புதனால் செல்வாக்கு உயரும். வருமானம் அதிகரிக்கும்.