உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கன்னி

 வார பலன் (21.8.2026 - 27.8.2026)கன்னி: நரசிம்மரை வழிபட சங்கடங்கள் விலகும்.உத்திரம் 2,3,4: புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். உங்கள் செல்வாக்கையும் அந்தஸ்தையும் உயர்த்திக் கொள்வதற்காக தாராளமாக செலவு செய்வீர்கள். வியாபாரம் தொழிலில் இருந்த தடைகள் விலகும். எதிர்பார்த்த பணம் வரும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும்.அஸ்தம்: லாப குருவும் அவருடைய பார்வைகளும் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்கும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். மனக் குழப்பம் விலகும். வம்பு வழக்குகள் முடிவிற்குவரும். விலகிச்சென்ற நண்பர்கள் மீண்டும் தேடிவருவர். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும்.சித்திரை 1,2: சகாய ஸ்தானாதிபதி செவ்வாய் கேந்திர பலம் பெறுவதால், தடைபட்டு வந்த வேலைகள் முடிவிற்கு வரும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முடியாது என்று கைவிட்ட வேலைகளையும் எடுத்து முடித்து லாபம் காண்பீர்கள். சிலர் சொந்த இடம் வீடு வாங்குவீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !