வார ராசிபலன்
வார ராசிபலன் கன்னி
வார பலன் (28.8.2026 - 3.9.2026)கன்னி:நரசிம்மரை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.உத்திரம் 2,3,4:விரய சூரியன் அலைச்சலையும் செலவையும் அதிகரிப்பார். எடுத்த வேலைகள் இழுபறியாகும். எதிர்பார்ப்பும் தள்ளிப்போகும். சிலருக்கு உடல்நிலையில் எதிர்பாராத சங்கடங்கள் ஏற்படும். செவ்வாய்க்கிழமை அனைத்திலும் நிதானம் தேவை.அஸ்தம்:ராசிநாதன் புதன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரிகளும் கலைஞர்களும் நிதானமாக செயல்படுவது நன்மையளிக்கும். புதிய முதலீடுகளில் கூடுதல் கவனம் தேவை. லாப ஸ்தானத்தில் குரு உச்சமாக சஞ்சரிப்பதால் தேவைக்கேற்ற பணம் வரும். எடுத்த வேலை முடிவிற்கு வரும். புதன்கிழமை விழிப்புடன் செயல்படுவது நன்மையாகும்.சித்திரை 1,2:உங்கள் சகாய ஸ்தானாதிபதி செவ்வாய் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழிலில் அக்கறை அதிகரிக்கும். புதிய திட்டங்கள் தீட்டி ஆதாயம் அடைவீர் என்றாலும் முதலீடுகளில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகாரியை அனுசரித்துச் செல்வது அவசியம். வியாழக்கிழமை காலைவரை புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நன்மையாகும்.சந்திராஷ்டமம்: 1.9.2026 அதிகாலை 4:28 மணி - 3.9.2026 காலை 8:01 மணி