/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் கன்னி
வார பலன் ( 11.9.2026 - 17.9.2026 )கன்னி: ஆதி திருவரங்கனை வழிபட நன்மை உண்டாகும்.உத்திரம் 2,3,4: திடீர் செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். வேலையில் இருப்பவர்களுக்கு திடீர் பயணம் ஏற்படும். எடுத்த வேலை வெற்றியாகும். குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொண்டு ஆதரவு தருவர். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும்.அஸ்தம்: முயற்சியில் முன்னேற்றம் உண்டு. நினைத்த வேலை நடக்கும். வியாபாரம் தொழில் வளர்ச்சி அடையும். தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். கையில் பணம் புரளும். திருமண வயதினருக்கு வரன் வரும்.சித்திரை 1,2: தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உங்கள் திறமை வெளிப்படும். மற்றவரால் முடிக்க முடியாத வேலைகளை முடித்து லாபம் காண்பீர். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். சேமிப்பு உயரும். சிலருக்கு சொந்த இடம், வீடு என்ற கனவு நனவாகும்.