/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் கன்னி
வார பலன் (9.10.2026 - 15.10.2026 )கன்னி: வெங்கடாஜலபதியை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.உத்திரம் 2,3,4: உற்சாகமாக செயல்படுவீர். வீண் செலவு குறையும். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். அரசுவழி முயற்சி சாதகமாகும். சிலருக்கு திடீர் பயணம் ஏற்படும். எடுத்த வேலை வெற்றியாகும். உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டு விலகும். ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது.அஸ்தம்: வியாபாரம் தொழில் வளர்ச்சி அடையும். வருவாய் அதிகரிக்கும். நினைத்த வேலை நடக்கும். தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும்.சித்திரை 1,2: செல்வாக்கு உயரும் வாரம் இது. இழுபறியாக இருந்த வேலை முடியும். உங்கள் தனித்தன்மை வெளிப்படும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். சேமிப்பு உயரும். சிலருக்கு சொந்த இடம், வீடு என்ற கனவு நனவாகும்.