வார ராசிபலன்
வார ராசிபலன் கன்னி
வார பலன் (16.10.2026 - 22.10.2026 )கன்னி: நரசிம்மரை வழிபட சங்கடம் விலகும். நன்மை உண்டாகும்.உத்திரம் 2,3,4: உங்கள் செயல்களில் வேகம் இருக்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். இழுபறியாக இருந்த வேலை முடியும். ஞாயிற்றுக்கிழமை முதல் தன குடும்ப ஸ்தானத்தில் நீச்சம் அடைவதால் அனைத்திலும் நிதானம் தேவை.அஸ்தம்: செவ்வாய்க்கிழமை வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கு குரு உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவார். வருமானத்தை அதிகரிப்பார். செல்வாக்கை உயர்த்துவார். குடும்பத்தில் நிம்மதியான நிலையை உண்டாக்குவார். தொழிலை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வார்.சித்திரை 1,2: உங்கள் அஷ்டமாதிபதி செவ்வாய் நீச்சம், ராசியாதிபதி புதனும், கர்மக்காரகன் சனியும் வக்கிரம் அடைந்திருக்கும் நிலையில், ஆறாமிட ராகு உங்கள் நிலையை உயர்த்துவார். உங்களுக்கேற்பட்ட நெருக்கடிகளை நீக்குவார். மறைமுகத் தொல்லைகளை இல்லாமல் செய்வார். தடைபட்ட வேலைகளை முடிவிற்கு கொண்டுவருவார். வம்பு, வழக்கு என்பதில் வெற்றியை உண்டாக்குவார்.