வார ராசிபலன்
வார ராசிபலன் கன்னி
வார பலன் (30.10.2026 - 5.11.2026)கன்னி: ஆதி திருவரங்கனை வழிபட சங்கடம் விலகி நன்மை உண்டாகும்.உத்திரம் 2,3,4: வேலைப்பார்க்கும் இடத்தில் உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது அவசியம். சிலருக்கு திடீர் பயணமும் எதிர்பாராத செலவும் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் வேலைகளை ஏற்க வேண்டியதாக இருக்கும். புதிய முயற்சிகளில் நிதானம் அவசியம்.அஸ்தம்: யோகக்காரகன் ஆறாமிடத்தில் சஞ்சரிப்பதால் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். வியாபாரம் தொழில் லாபம் அடையும். வழக்கு விவகாரம் சாதகமாகும் என்றாலும் குடும்பத்தினரை ஆலோசித்து செயல்படுவதும் வார்த்தைகளில் நிதானம் காப்பதும் நன்மை அளிக்கும்.சித்திரை 1,2: வெளிநாடு செல்வதற்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். மறைமுகத் தொல்லை விலகும். வரவேண்டிய பணம் வரும். உங்கள் அஷ்டமாதிபதி செவ்வாய் நீச்சம் அடைந்து இருப்பதால் வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். செல்வாக்கு உயரும். ஆரோக்கியம் மேம்படும்.