/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் கன்னி
வார பலன் (06.11.2026 - 12.11.2026 )கன்னி: சங்கர நாராயணரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.உத்திரம் 2,3,4: திட்டமிட்டு செயல்படுவதால் எடுக்கும் வேலை லாபம் தரும். சுபச்செலவு அதிகரிக்கும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்ற தாராளமாக செலவு செய்வீர்கள். அஸ்தம்: தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். வருவாய் அதிகரிக்கும். நினைத்த வேலைகள் நடக்கும். தம்பதிகள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். சிலர் புதிய வாகனம், வீடு, இடம் வாங்குவீர்கள். சித்திரை 1,2: ராகு பகவானால் உங்கள் செல்வாக்கு உயரும். இழுபறியான வேலை முடியும். ஆரோக்கியம் சீராகும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். சேமிப்பு உயரும். வம்பு வழக்கு சாதகமாகும். பொருள் சேரும்.