உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கன்னி

வார பலன் (20.11.2026 - 26.11.2026)கன்னி:தர்பாரண்யேஸ்வரரை வழிபட நன்மை உண்டாகும். எதிர்ப்பு விலகும்.உத்திரம் 2,3,4:சகாய சூரியனால் உங்கள் செல்வாக்கு உயரும். தைரியமாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும். குடும்பம், தொழில், வருமானத்தில் கவனம் செல்லும். செயல்களில் வேகம் இருக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்குவரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை அனைத்திலும் நிதானம் தேவை.அஸ்தம்:உங்கள் தன குடும்பாதிபதி சுக்கிரனுடன் ராசிநாதன் புதன் சஞ்சரிப்பதால் திட்டமிட்டு செயல்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். வரவேண்டிய பணம் வரும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். பழைய கடன்களை அடைப்பதுடன் கொடுத்த வாக்கையும் காப்பாற்றுவீர்கள். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். திங்கள்கிழமை திட்டமிட்டு செயல்படுவது நன்மையாகும்.சித்திரை 1,2:உங்கள் சகாய ஸ்தானாதிபதி செவ்வாய் விரய  ஸ்தானத்தில் மங்களக் காரகன் குருவுடன் சஞ்சரிப்பதால் புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். சுபச்செலவு ஏற்படும். லாப கேதுவால் வியாபாரம் தொழிலில் அக்கறை அதிகரிக்கும். வருமானம் உயரும். திங்கள் செவ்வாயில் திட்டமிட்டு செயல்படுவது நன்மையாகும்.சந்திராஷ்டமம்: 22.11.2026 அதிகாலை 3:55 மணி - 24.112026 காலை 7:58 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !