உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மீனம்

வார பலன் (23.1.2026 - 29.1.2026)மீனம்: செல்வ கணபதியை வழிபட நினைப்பது நடக்கும்.பூரட்டாதி 4: உங்களுக்கிருந்த நெருக்கடி நீங்கும் வாரம் இது. அதிர்ஷ்ட வாய்ப்பு கதவைத் தட்டும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். எடுக்கும் வேலை வெற்றியாகும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். புதிய முயற்சி லாபம் தரும்.உத்திரட்டாதி: கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் மனக் குழப்பம் விலகும். வேலையில் ஏற்பட்ட பிரச்னை முடியும். தேவை பூர்த்தியாகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். எதிர்ப்பு விலகும். வழக்கு சாதகமாகும். ரேவதி: லாப, சத்ரு ஜெய ஸ்தானங்கள் பலம் பெறுவதால் இந்த நேரம் யோகமான நேரம். தொழிலி்ல் முன்னேற்றம் அடையும். புதிய சொத்து சேரும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். செல்வாக்கு உயரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !