/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் மீனம்
வார பலன் (8.8.2025 - 14.8.2025)மீனம்: மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபட நன்மை உண்டாகும்.பூரட்டாதி 4: குரு பார்வையால் இருந்த நெருக்கடி விலகும். தொழிலில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வேலைத்தேடியவர்களுக்கு கனவு நனவாகும். விரய செலவு கட்டுப்படும்.உத்திரட்டாதி: கேதுவால் உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். வழக்கு சாதகமாகும். போட்டியாளர்களால் ஏற்பட்ட நெருக்கடி விலகும். தடைபட்ட வேலை நடக்கும். சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவது நல்லது.ரேவதி: சூரியனும் புதனும் உடல்நிலையில் சங்கடத்தையும் அவப்பெயரையும் ஏற்படுத்துவார்கள். இருந்தாலும் குருவின் பார்வையும், கேதுவும் உங்களைப் பாதுகாப்பார்கள். நினைத்த வேலை நடக்கும். மனக் குழப்பம் நீங்கும்.