/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் மீனம்
வார பலன் (10.10.2025 - 16.10.2025)மீனம்: ஆலங்குடி குருவை வழிபட நினைப்பது நடக்கும்.பூரட்டாதி 4: ராசிநாதன் குரு ஐந்தாமிடத்தில் சஞ்சரித்து ராசியையும் பார்ப்பதால் உங்கள் நிலை உயரும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை விலகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். எடுக்கும் முயற்சி முன்னேற்றம் அடையும்.உத்திரட்டாதி: சப்தம ஸ்தான சூரியனால் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். ஆறாமிட கேதுவால் செல்வாக்கு உயரும். நேற்றைய கனவு நனவாகும். எடுக்கும் வேலை வெற்றியாகும். இழுபறியாக இருந்த வேலை முடியும்.ரேவதி: எட்டாமிடத்து புதனால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சாதுரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். எதிர்பார்த்த பணம் வரும். ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.