உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மீனம்

 வார பலன் ( 2.1.2026 - 8.1.2026 )மீனம்: அதிகாலையில் சூரியனை வழிபட நினைப்பது நடக்கும்.பூரட்டாதி 4: உங்கள் நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும். உங்களை விட்டு விலகிச் சென்றவர் மீண்டும் தேடி வருவர். வருவோருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை உயரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும்.உத்திரட்டாதி: சத்ரு ஜெய ஸ்தான கேதுவால் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வம்பு வழக்கு என்றிருந்த நிலைமாறும். செல்வாக்கு உயரும். எடுக்கும் வேலை வெற்றியாகும். வருமானம் திருப்தி தரும். மீண்டும் வசந்தம் வீசும்.ரேவதி: பத்தாமிடத்தில் சஞ்சரிக்கும் சூரியன் புதனால் அதிர்ஷ்டக்காற்று உங்களை நோக்கி வீசும். வரவு அதிகரிக்கும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசு வழி முயற்சி சாதகமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !