உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மீனம்

 வார பலன் (16.1.2026 - 22.1.2026)மீனம்: மகாலட்சுமியை வழிபட  எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.பூரட்டாதி 4: லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரனால் எடுக்கும் வேலை வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். புதிய தொழில், வியாபாரம் தொடங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.உத்திரட்டாதி: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். அரசியல் வாதிகள் செல்வாக்கு உயரும்.ரேவதி: உங்களுக்கு அதிர்ஷ்டமான நேரம் இது. போராட்டம் பிரச்னை எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். ஒருசிலர் புதிய வீட்டில் குடியேறுவீர். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும்.  எதிர்பார்த்த பணம்வரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !