உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மீனம்

 வார பலன் (30.1.2026 - 5.2.2026)மீனம்: சனிஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட நினைப்பது நடக்கும்.பூரட்டாதி 4: வக்கிர குருவால் நட்பு வட்டம் விரிவடையும். தம்பதிக்குள் இருந்த இடைவெளி விலகும். தொழில் முன்னேற்றம் அடையும். எதிர்ப்பு விலகும்.பெரியோர் ஆதரவு கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.உத்திரட்டாதி: ஆறாமிட கேதுவும், லாப ஸ்தான சூரியனும் செவ்வாயும் செல்வாக்கை உயர்த்துவர். எதிர்ப்பை இருந்த இடம் தெரியாமல் செய்வர். ஆரோக்யமாக நடைபோட வைப்பர். வருமானத்தை உயர்த்துவர். கனவை நனவாக்குவர்.ரேவதி: வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். அரசு வழி முயற்சி ஆதாயமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். வரவேண்டிய பணம் வரும். இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !